என் மலர்

  செய்திகள்

  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
  X
  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

  விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் சுமார் 60 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என வேளாண் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
  வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி மாநில எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

  நாளை விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துகிறார்கள். மத்திய அரசு இதற்கு கடுமையான பாதுகாப்பை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘‘விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்’’ என்றார்.

  ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாயிகள் தெரிவித்துதுள்ளனர். அதேவேளையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×