என் மலர்

  செய்திகள்

  லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார்
  X
  லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார்

  டெல்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய நிதிஷ் குமார் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
  பாட்னா:

  கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், உடல்நல குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம், விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  அவர் விரைவில் உடல்நலம் தேற அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் லாலுவின் அரசியல் எதிரியும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமாரும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

  லாலு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பது எனது தீவிர ஆசை ஆகும்’ என்று கூறினார். கடந்த 2018-ம் ஆண்டிலும் லாலுவின் உடல்நிலை மோசமடைந்தபோது, அடிக்கடி அவருடைய உதவியாளர்களை அழைத்து லாலுவின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்ததாக கூறிய நிதிஷ் குமார், இதற்காக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களையும் எதிர்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
  Next Story
  ×