என் மலர்

  செய்திகள்

  நளின்குமார் கட்டீல்
  X
  நளின்குமார் கட்டீல்

  பிரதமர் மோடி தலைமையில் பாஜக 6 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி: நளின்குமார் கட்டீல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா கடந்த 6 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. ஆட்சியில் மட்டுமின்றி அரசியலிலும் அவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
  பெங்களூரு :

  கர்நாடக பா.ஜனதா சார்பில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

  பிரதமர் மோடி நல்ல சிறப்பான திட்டங்களை அமல்படுத்தியதன் மூலம் அவருக்கு மக்களிடையே நற்பெயர் கிடைத்துள்ளது. ஆட்சியில் மட்டுமின்றி அரசியலிலும் அவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா கடந்த 6 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. எந்த வன்முறையும் இல்லாமல் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தால் கலவரம் வெடிக்கும் என்று சொல்லப்பட்டது. அவ்வாறு எந்த கலவரமும் வெடிக்கவில்லை. காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. முத்தலாக் நடைமுறை ரத்து செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். நாம் புகழுக்கு பின்னால் ஓடக்கூடாது. புகழ் நம்மை தேடி வர வேண்டும்.

  இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.

  இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×