search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம்

    இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு பல நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    தேஜாஸ் போர் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.மாதவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர, “தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு பல நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் முதல் ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

    மேலும், “இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை வழங்குவது என்பது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும். இப்படி வழங்கி முடிக்கும் வரையில் ஆண்டுக்கு 16 பேர் விமானங்கள் தயாரித்து முடிக்கப்படும்” எனவும் கூறினார். சீனாவின் ஜேஎப்-17 போர் விமானத்தைக் காட்டிலும், தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானம் சிறந்த செயல்திறனை கொண்டிருப்பதாகவும், சிறந்த எந்திரம், ரேடார் அமைப்பு மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×