search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிஷேக் பானர்ஜி
    X
    அபிஷேக் பானர்ஜி

    ஒரு குடும்பத்தில் ஒருவர்தான்: மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் விலக தயார்- மம்தா மருமகன்

    ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் அரசியல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால், நான் ராஜினாமா செய்வேன் என மம்தா பானர்ஜி மருமகன் தெரிவித்துள்ளார்.
    மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். இவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் அபிஷேக்கை குறிவைத்துதான் பா.ஜனதா தாக்குதல் நடத்த இருக்கிறது.

    அபிஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறார். மிரட்டி பணம் பறிக்கிறார் போன்ற விமர்சனமும் உள்ளது. இதையெல்லாம் எதிர்த்துதான் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் அரசியலில் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் நான் ராஜினாமா செய்வேன் என அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், எனது மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை (மிரட்டி பணம் பறித்தல்) நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்குவேன். கைலாஷ் வியஜ்வர்கியாவில் இருந்து சுவேந்து அதிகாரி, முகுல் ராயல் முதல் ராஜ்நாத் சிங், மற்றும் பலரின் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பா.ஜனதாவில் முக்கிய பொறுப்புகளை ஆக்கிரமித்து உள்ளனர்.

    நீங்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் அரசியல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தால், மம்தா பானர்ஜி மட்டும்தான் எங்கள் குடும்பத்தில் அரசியல் நடவடிக்கையில் இருப்பார் என்பதை உறுதி செய்கிறேன்’’ எனறார்.
    Next Story
    ×