search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராக்டர் பேரணி (கோப்புப்படம்)
    X
    டிராக்டர் பேரணி (கோப்புப்படம்)

    டிராக்டர் பேரணிக்கு இடையூறு: பாகிஸ்தானில் கையாளப்படும் 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள்

    டெல்லியில் நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணில் இடையூறு விளைவிக்க பாகிஸ்தானில் இருந்து 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் குடியரசு தினவிழா அன்று விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்த இருக்கிறார்கள். அனைத்து மாநிலங்கள் சார்பாக குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும். ராணுவ வீரர்கள் அணிவகுப்பு, பிரதமர் உரை ஆகியவற்றால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும்.

    விவசாயிகள் பேரணியால் பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் பலப்படுத்த வேண்டிய நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது. குடியரசு தினவிழா அணிவகுப்பு முடிந்த பின்னர், விவசாயிகள் பேரணி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் புலனாய்வு பிரிவு சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபேந்த்ர பதாக் கூறுகையில் ‘‘விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் இடையூறு விளைவிக்க தவறாக வழிநடத்தப்படுபவர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து கடந்த 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு கையாளப்படுகின்றன.

    வெவ்வேறு ஏஜென்சிகளிடம் இருந்து இதுகுறித்து ஒரே மாதிரியான உள்ளீடு உள்ளது. இது எங்களுக்கு சவாலானது. இருந்தாலும் குடியரசு தினவிழா அணிவகுப்பிற்குப் பிறகு கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெறும்’’  என்றார்.
    Next Story
    ×