என் மலர்

  செய்திகள்

  அமித் ஷா
  X
  அமித் ஷா

  இன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் அசாமில் குண்டுகள் அல்லாத நிலையை உருவாக்குவோம்: அமித் ஷா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் மாநிலத்தல் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் குண்டுகள் அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.
  மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா அசாமில் நடைபெற்ற முதல் தேர்தல் பேரணில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது ‘‘காங்கிரஸ் அசாமில் பிரித்தாளும் கொள்கை மூலம் ஆட்சி செய்தது. 20 வருடத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். குண்டுகளால் அசாம் இளைஞர்களை காங்கிரஸ் கொன்றது.

  இன்னும் ஐந்தாண்டுகள் எங்களிடம் வழங்கினால் குண்டுகள் அல்லாத, போராட்டம் அல்லாத, வெள்ளப்பெருக்கு அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம்.

  பா.ஜனதா வகுப்புவாத கட்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் அவர்கள் கேரளாவில் முஸ்லிம் லீக் உடனும், அசாமில் ஏ.ஐ.யு.டி.எஃப் உடனும் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ்- ஏஐயுடிஎஃப் கைகளில் அசாம் பாதுகாப்பானது அல்ல’’ என்றார்.
  Next Story
  ×