search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மத்திய அரசு மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

    பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வெளியிடுகின்றன. சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணமாய் இருக்கிறது.

    இந்த வாரத்தில் 4-வது முறையாக பெட்ரோல், டீசல்களின் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. பெட்ரோல், டீசல் விலை தலா 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆகவும், டீசல் ரூ.81.14 ஆகவும் உள்ளது.

    பெட்ரோல் விலை டெல்லியில் ரூ.85.70 ஆகவும், மும்பையில் ரூ.92.28 ஆகவும், டீசல் விலை டெல்லியில் ரூ.75.88 ஆகவும், மும்பையில் ரூ.82.66 ஆகவும் இருக்கிறது.

    பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். எரிவாயு- டீசல்- பெட்ரோல் விலையில் பிரதமர் மோடி மிகப்பெரிய வளர்ச்சியை காட்டியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி ஜி.டி.பி. யில் அதிக வளர்ச்சியை காட்டியுள்ளார். அதாவது ஜி.டி.பி. என்பது சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலையில் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டியுள்ளார்.

    பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் மோடி அரசோ வரி வசூலில் மும்முரமாக உள்ளது.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    Next Story
    ×