search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடப்படும் போது தக்கபதிலடி கொடுக்கப்படுகிறது - பிரதமர் மோடி பேச்சு

    இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் முயற்சிகள் நடைபெறும்போது தக்கபதிலடி கொடுக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்குவங்காளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

    அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தன்கார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாடு முழுவதும் ஆண்டுதோறும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23-ல் ’பரக்ராம் திவாஸ்’ விழாவாக கொண்டாட அறிவித்துள்ளோம்.

    நேதாஜியின் வாழ்க்கை மற்றும் அவரது முடிவுகள் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும். தீர்மானமான மற்றும் உறுதியானவரால் எதையும் சாதிக்க முடியும்.

    வறுமை, கல்வியின்மை, நோய் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகள் என நேதாஜி கருதினார். சமுதாயம் ஒற்றுமையுடன் இணையும் போது இந்த பிரச்சனைகள் தீர்த்துவிடும்.

    உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் எல்லைக்கோடு வரை ஒருகாலத்தில் நேதாஜி கற்பனை செய்த இந்தியாவின் சக்திவாய்ந்த அவதாரம் தற்போது உலகிற்கு சாட்சியாக உள்ளது.

    இன்று இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் முயற்சிகள் நடைபெறும்போது தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது. பிறநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கி உதவி செய்யும் இந்தியாவை நேதாஜி நினைத்து பெருமைகொள்வார். ஹௌரா - கல்ஹா மெயில் ரெயில் இனி நேதாஜி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும்.

    என்றார்.
    Next Story
    ×