search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேதாஜி பிறந்தநாள் விழா
    X
    நேதாஜி பிறந்தநாள் விழா

    நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் - பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி பங்கேற்பு

    நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    கொல்கத்தா:

    இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியா தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் என்ற பெருமையும் சுபாஷ் சந்திரபோசையே சேரும்.

    சுதந்திரபோராட்டத்தில் முக்கியப்பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த மாநிலமான மேற்குவங்காளத்தில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில் நேதாஜியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தற்போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தன்கார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
    Next Story
    ×