
பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து ஊழியர்களுக்கு வழங்குவர். பட்ஜெட் அச்சிடும் ஊழியர்களுக்கு நிதிமந்திரி அல்வா கிண்டி வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், 2021-22 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் காகிதமின்றி டிஜிட்டல் மூலம் தாக்கல் செய்யப்படும் என நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனாலும், வழக்கமான முறைப்படி அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.