search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை
    X
    விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை

    விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

    விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
    புதுடெல்லி: 

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 59-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.

    வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர தயாராக உள்ளதாகவும், வேண்டுமென்றால் சட்டங்களை ஒன்றரையாண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு சார்பில் கடந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 11-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

    ஆனால், இந்த கூட்டத்தில்எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண்சட்டங்களை திரும்ப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருப்பதாலும், சட்டங்களை முழுவதும் திரும்ப்பெற முடியாது என மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாலும் 11-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளனது.
    Next Story
    ×