என் மலர்

  செய்திகள்

  ரோஜா
  X
  ரோஜா

  திருப்பதி கோவிலில் உரிய மரியாதை கிடைக்கவில்லை- நடிகை ரோஜா குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.
  திருப்பதி:

  திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

  அப்போது உரிமை குழு தலைவரிடம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில தொழிற்சாலை துறை உட்கட்டமைப்பு கழக தலைவருமான நடிகை ரோஜா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

  "என்னை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். எனது பதவிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை யாருமே தருவதில்லை.

  ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு சென்றாலும், அப்போதும் தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை தருவதில்லை. என்னை யாருமே ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்வதில்லை" என்று கண்ணீருடன் குற்றம் சாட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  ரோஜாவின் முறையீடு பற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என உரிமை குழு தலைவர் கோவர்த்தனன் தெரிவித்தார்.

  ஏற்கனவே ரோஜா, இதற்கு முன்பும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயரதிகாரிகள், தனது சொந்த கட்சியினர் மதிப்பதில்லை என கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்திருந்தார்.

  இப்போது தேவஸ்தான அதிகாரிகள் தன்னை மதிப்பதில்லை என்று கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×