என் மலர்

  செய்திகள்

  தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்
  X
  தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்

  நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
  புதுடெல்லி:

  நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. முன்களப் பணியாளர்கள் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். 

  எனினும் சிலர் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பற்றிய பயம் காரணமாக தடுப்பூசி போடுவதை தவிர்க்கின்றனர். இதனை போக்குவதற்காக சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போடுகின்றனர். 

  இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 10,43,534 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,37,050 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  Next Story
  ×