search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய காட்சி.
    X
    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய காட்சி.

    எல்லை பிரச்சினை: பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

    மராத்தா இடஒதுக்கீடு, கா்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக மாநில அனைத்து கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
    மும்பை :

    மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று சயாத்ரி விருந்தினர் மாளிகையில் அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மாநில மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, அசோக் சவான், ஜெயந்த் பாட்டீல், சுபாஷ் தேசாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    மத்திய அரசிடம் இருந்து மாநில அரசின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து எம்.பி.க்களிடம் கூறினேன். மேலும் மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத்தொடரில் எழுப்பமாறு தெரிவித்து இருக்கிறேன். இந்த விவகாரத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும். இதேபோல கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாகவும் எம்.பி.க்கள் பிதரமரை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×