search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வெஜிடேரியன்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு - ஆய்வில் தகவல்

    வெஜிடேரியன்கள் மற்றும் புகைபிடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

    கடந்த 2016-ம் ஆண்டில் நடத்திய ஒரு ஆய்வில் சைவ உணவு உண்பவர்களுக்கு வைரஸ் நோய்கள் குறைவாகவே உள்ளன என்று தெரியவந்தது. 

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளையும், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் போன்ற உணவுகளையும் மக்கள் சாப்பிடலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, கொரோனா வைரஸ் யாரை தாக்கும், தாக்காது என்பது குறித்த விவாதம் நடந்தது. அசைவம் சாப்பிடுவர்களை கொரோனா தொற்றிவிடும், சைவ உணவு சாப்பிடுபவர்களை கொரோனா தொற்றாது என்ற கருத்தும் நிலவி வந்தது.

    இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்புக்கு வலுசேர்க்கும் வகையில், ஒரு ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பான்-இந்தியா செரோசர்வே என்ற ஆய்வு நடத்தியுளளது.

    அந்த ஆய்வில், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. 

    கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்பது கண்டறியப்பட்டது.

    மேலும் தனியார் போக்குவரத்து, குறைந்த ஆட்கள் அளவுள்ள தொழில்கள், புகைபிடித்தல், 'ஏ' அல்லது 'ஓ' ரத்த குழு வகையை சேர்ந்தவர்களும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக உள்ளனர் எனவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
    Next Story
    ×