search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோதிந்தர் எஸ் உக்ரஹான்
    X
    ஜோதிந்தர் எஸ் உக்ரஹான்

    வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை எந்த பரிந்துரையையும் ஏற்கமாட்டோம்: விவசாயிகள் திட்டவட்டம்

    மத்திய அரசின் எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கமாட்டோம். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் ஒரே கோரிக்கை என விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
    வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வருகிற 26-ந்தேதி ஒரு லட்சம் டிராக்டர்கள் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனக்கூறி வந்த மத்திய அரசு, 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தது.

    இதுகுறித்து விவசாய சங்கங்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்துகின்றன. சம்யுக்தா கிஷான் மோர்சாவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

    அப்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச ஆதாய விலையை சட்டமாக்குவதை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் அதன் தலைவர் ஜோதிந்தர் எஸ் உக்ரஹான் கூறுகையில் ‘‘மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் வரை எந்தவிதமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என முடிவு செய்துள்ளோம். நாளை மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையும் இதை வலியுறுத்துவோம். அதாவது எங்களுடைய ஒரே கோரிக்கை 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். அதிகாரப்பூர்வமாக எம்எஸ்பி-க்கு உத்தரவாதம் என்பதுதான். இது கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது’’ என்றார்

    இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கல் நீண்டு கொண்டே செல்கிறது.
    Next Story
    ×