search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

    சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிற 27-ந்தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார்.

    இத்தகவலை அறிந்த உடன் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அமமுகவினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது, சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறி தென்பட்டதால் சசிகலாவிற்கு நடத்தப்பட்ட ஆர்.டி., பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில், சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகார் மனுவை அளித்துள்ளார்.

    முன்னதாக சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்தார்.
    Next Story
    ×