என் மலர்

  செய்திகள்

  சி.டி.ரவி
  X
  சி.டி.ரவி

  புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?: சி.டி.ரவி கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
  பெங்களூரு :

  பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்த விவசாய முறை அமலில் உள்ளது. அதனால் அந்த விவசாயிகள் நல்ல லாபத்தை பெற்று வருகிறார்கள். இதே நடைமுறையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?. பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைக்கிறது என்றால், இந்த ஆதாயம் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டாமா?.

  வேளாண் சந்தைகளில் விவசாயிகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க வெளிப்படையான, திறந்த நிலை சந்தை நடைமுறை அமல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அந்த நடைமுறையை ராகுல் காந்தி எதிர்ப்பது ஏன்?. ஒப்பந்த விவசாயத்திற்கு சட்ட பலம் வழங்கி, விளைபொருட்களுக்கு 3 நாட்களில் பணம் கிடைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  இது எப்படி விவசாயிகள் விரோத சட்டமாகும். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, வேளாண் சந்தைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதினார். அந்த பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அதை சித்தராமையா தற்போது எதிர்ப்பது ஏன்?.

  ஆனால் காங்கிரஸ் இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டது. மத்திய அரசின் சட்டங்களை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே காங்கிரசின் நோக்கம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு வரும் என்பதை காங்கிரஸ் கூற வேண்டும்.

  இவ்வாறு சி.டி.ரவி கூறியுள்ளார்.
  Next Story
  ×