search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர் நினைவுச் சின்னம்
    X
    போர் நினைவுச் சின்னம்

    கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர், போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டது

    கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்தது. கற்கள், ஆணி பொருத்திய கட்டைகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை கொண்டு சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். சீன தரப்பில் 35 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், குடியரசு தினம் நெருங்குவதையொட்டி, கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டன. அவர்களில் சிலருக்கு குடியரசு தினத்தன்று வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    இதுபோல், கிழக்கு லடாக்கில், 20 வீரர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றை இந்திய ராணுவம் ஏற்கனவே எழுப்பி உள்ளது. அதில், அவர்களின் சாகசங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×