search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
    X
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

    ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி வாழ்த்து

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

    அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது. துணை அதிபராக கமலா ஹாரிசும், அதிபராக ஜோ பைடனும் பதவியேற்றுக் கொண்டனர்.
     
    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணைத் தலைவராக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்க உறவுகள் பல பகிரப்பட்ட மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×