என் மலர்

செய்திகள்

கொரோனா தடுப்பூசி
X
கொரோனா தடுப்பூசி

நாட்டில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த நாளன்று உறைந்த நிலையில் 1000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து...வீண்?

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாடு முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அந்நாளில் அசாமில் 1000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கவுகாத்தி:

இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

16-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தபோதும் அதற்கு முந்தைய நாளான 15-ம் தேதி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சுகாதாரத்துறைக்கு சொந்தமான மருந்து சேமிப்பு கிடங்கில் தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டது.

இரண்டு தடுப்பூசிகளும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப
நிலையில் சேமித்து வைக்க வேண்டும் என்பதால் மருந்து சேமிப்பு கிடங்கில் அதற்கான பிரிசர் (குளிர்பெட்டி) வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பிரிசரில் மருந்து சேமித்து வைக்கப்பட்டது. 15-ம் தேதி சேமித்து வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து 16-ம் தேதி முதல் மக்களுக்கு செலுத்தும் நடைமுறை தொடங்கியது.

அந்த வகையில், அசாம் மாநிலம் கவுகாத்தில் உள்ள சில்சேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி 1,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ் பிரிசரில் சேமித்து வைக்கப்பட்டது.

அந்த கொரோனா தடுப்பூசி மருந்தை அடுத்த நாளான 16-ம் தேதி முன்கள பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக பிரிசரில் இருந்து வெளியே எடுத்தனர். அப்போது பிரிசரில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ் பனிக்கட்டியாக உறைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பிரிசரின் தப்பவெப்பநிலை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் என வைக்கப்படிருந்த போதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிசரின் தட்பவெப்பநிலை குறிப்பிட்டதை விட அதிக அளவு குளிரை உருவாக்கியுள்ளது. இதனால், பிரிசரில் இருந்த 1,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து குளிரில் உறைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உறைந்த நிலையில் இருந்த 1,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தடுப்பூசி மருந்துகளை மீண்டும் பயன்படுத்தலாமா? தடுப்பூசியின் செயல்திறன் குறையாமல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை மையத்திற்கு தடுப்பூசி மருந்து
கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த முதல் நாளான 16-ம் தேதி பிரிசரில் வைக்கப்பட்டிருந்த 1,000 கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்கள் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.  
Next Story