search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்பு படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்பு படம்)

    நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியா

    நேபாளம், பூடான், வங்காளதேசம் உள்பட 6 நாடுகளுக்கு இந்திய அரசு கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    தடுப்பூசிகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென அண்டைநாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் அண்டைநாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்க முன்வந்துள்ளது.

    அதன்படி, பூடான், மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக, அண்டைநாடான நேபாளத்திற்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை வழங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை நல்லெண்ண அடிப்படையில் வழங்கும் இந்தியாவுக்கு அண்டைநாடுகள் நன்றி தெரிவித்துள்ளன.
    Next Story
    ×