search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி நோக்கி டிராக்டரில் வரும் விவசாயிகள்
    X
    டெல்லி நோக்கி டிராக்டரில் வரும் விவசாயிகள்

    டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கும் விவசாயிகள்

    டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் இன்று 57-வது நாளாக நீடித்து வருகிறது.  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி வருகின்றனர். 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. டெல்லிக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறுகின்றனர். அதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி நகருக்குள்தான் போராட்டத்தை நடத்துவோம் என்று பிடிவாதமாக கூறி வருகிறார்கள்.

    டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்த அனுமதி அளிக்கும்படி டெல்லி காவல்துறை உயர் அதிகரிகளை சந்தித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லியில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பதா, வேண்டாமா? என்பது தொடர்பாக காவல்துறை முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டதால், காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கோரி உள்ளனர்.  காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இதேபோல் டிராக்டர் பேரணி செல்லும் பாதை மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக டெல்லி, அரியானா மற்றும் உத்தர பிரதேச காவல்துறை அதிகாரிகளிடம் விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். 
    Next Story
    ×