
உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில், பெலாட்டல் கிராமத்தை சேர்ந்த 18 வயதான தலித் இளம் பெண், மரத்தில் தூக்கில் தொங்கியநிலையில் பிணமாக போலீசாரால் மீட்கப்பட்டார். அந்த பெண், 12-ம்வகுப்பு மாணவியாவார். கடந்த சனிக்கிழமையன்று பிற்பகலில் காய்கறி வாங்க செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை தேடியபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
பெண்ணின் உறவினர் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக அவளுக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தொல்லை கொடுத்ததாக கூறினார். அதன் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் அதேபகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அவரை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.