search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    டெல்லியில் இன்று 161 பேருக்கு கொரோனா: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

    டெல்லியில் இன்று புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அம்மாநிலத்தில் இதுவரை 6,32,590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,19,501 பேர் குணமடைந்துள்ளனர். 10,754 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2335 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்றில் இருந்து தற்போது வரை உருமாறிய கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116ஆக உள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×