search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு... உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு

    டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்டமான டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்த்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகளின் டிராக்டர் பேரணி சட்டவிரோதம் என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார். 

    இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவது சட்டம் ஒழுங்கு விவகாரம் என்பதால், அவர்களை டெல்லிக்குள் நுழைய அனுமதிப்பது குறித்து காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும், காவல்துறைக்கு அந்த அதிகாரம் உள்ளது, உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றனர். அத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×