search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை: மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று மந்திரி சுதாகர் கூறினார்.
    பெங்களூரு 

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில், பதிவு செய்தவர்களில் 62 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. மக்கள் தடுப்பூசியை நம்ப வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    2 டோஸ் பெற்று 10 நாட்களுக்கு பிறகு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதுவரை வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். தேர்தலை போல் மையங்களை உருவாக்கி தடுப்பூசி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாவிட்டால், அடுத்து வரும் நாட்களில் வந்து அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

    கர்நாடக அரசின் செயல்பாடுகளை பா.ஜனதா மேலிட தலைவர்கள் பாராட்டியுள்ளனர். இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்று அமித்ஷா கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தாலும் பா.ஜனதா ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    Next Story
    ×