search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி திடீர் நிறுத்தம்

    மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு
    கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் கோவின் எனப்படும் செயலியில் உதவியுடன் நடைபெறுகிறது.

    தடுப்பூசி செலுத்த பதிவு செய்தவர்களுக்கு இந்த கோவின் செயலி மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

    குறிப்பாக, மகாராஷ்டிராவில் நேற்று 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக பயன்படுத்தப்படும் ’கோவின்’ செயலியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது.

    தடுப்பூசி போட உள்ளவர்களுக்கு கோவின் செயலி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் கால தாமதமாக பயனாளர்களை சென்றடைகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் தடுப்பூசி போடும் மையத்திற்கு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

    இந்த தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்வதற்கு 2 நாட்கள் ஆகும் என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தொழில்நுடபக்கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுடபக்கோளாறு ஏற்படுவதற்கு முன்புவரை மகாராஷ்டிராவில் நேற்று 18 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 64.34 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.     
    Next Story
    ×