search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை காவலாளிக்கு அலர்ஜி

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை காவலாளிக்கு அலர்ஜி ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அனுமதி பெற்றுள்ளது.

    கோவிஷீல்டு என்ற பெயரில் அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசிக்கு கோவாக்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த 2 தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    முதல்கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கும், முன்கள ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. நாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் சிலருக்கு சிறுசிறு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காவலாளியாக செயல்பட்டுவந்த நபருக்கும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணிநேரங்களில் அந்த நபருக்கு அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஒவ்வாமை ஏற்பட்ட அந்த நபர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவலாளிக்கு கோவாக்சின் போடப்பட்டதா? அல்லது கோவிஷீல்டு போடப்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
    Next Story
    ×