search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூகுள்
    X
    கூகுள்

    கூகுளின் தானியங்கி சைக்கிள் பற்றி வைரலாகும் பகீர் தகவல்

    கூகுள் நிறுவனம் தானியங்கி சைக்கிள் உருவாக்கி வருவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    எதிர்கால போக்குவரத்து முறை உருவாகி இருப்பதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் தானியங்கி மிதிவண்டி நகரின் சாலைகளில் வலம்வரும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. மேலும் இது கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் தானியங்கி மதிவண்டி என்றும் கூறப்படுகிறது.

    ஒரு நிமிடம் 54 நொடிகள் ஓடும் வீடியோவில் சிறுவர்கள், இளம் பருவத்தினர் தானியங்கி மிதிவண்டியில் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. வைரல் வீடியோ கூகுள் தானியங்கி ஸ்மார்ட் மிதிவண்டி எனும் தலைப்பில் பகிரப்படுகிறது.

     வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது கூகுள் நிறுவனம் முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. மேலும் வீடியோ இறுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி மட்டும் கிடைக்கும் என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது.

    தானியங்கி மிதிவண்டி பற்றிய இணைய தேடல்களில் கூகுள் தானியங்கி மிதிவண்டி பற்றிய தகவல் எதவும் கிடைக்கப்பெறவில்லை. இதே வீடியோ கடந்த ஆண்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வகையில் தானியங்கி மிதிவண்டி பற்றி வைரலான தகவலில் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×