search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

    பரபரப்பான அரசியில் சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக, தடுப்பு மருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
     
    அதேபோல், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் 48-வது நாளாக விவசாயிகள்  ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை என்றால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    இந்த விவகாரங்களால் அரசியல்களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்ட விவகாரங்களுக்கு மத்தியில் மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது.

    பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி திட்டம் 16-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் நாளை (13-ம் தேதி) நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 
    Next Story
    ×