search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்
    X
    முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

    முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக்கில் ஆய்வு

    இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்.
    புதுடெல்லி:

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சீனாவின் அத்துமீறலால், அருணாசலபிரதேச எல்லையில் லடாக் மண்டலத்தல் பான்காங் லேக் ஏரியா பள்ளத்தாக்கு பகுதியில், மே 5-ந் தேதி 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பிறகு, போர் மூளும் அபாயத்தில், ஆயிரக்கணக்கான வீரர்கள் லடாக் எல்லையில் மலைப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    பதற்றத்தை தணித்து, படைகளை பின்வாங்குவது பற்றி கடந்த நவம்பர் 6-ந் தேதி 8-வது மற்றும இறுதிக்கட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாட்டிற்கு இடையே பலசுற்று ராணுவம் மற்றும் அரசுமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், சுமார் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள், கிழக்கு லடாக் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவும் இதே அளவிலான வீரர்களை நிறுத்தி உள்ளன.

    8 மாத காலமாக இருநாட்டு வீரர்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து பிபின் ராவத் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். நேற்று, லே படைத்தளத்தை சேர்ந்த லெப்டினன்ட் பி.ஜி.கே.மேனேன், லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு படைப்பிரிவுகள் பற்றியும், அவர்களின் போர் வியூக திறன் பற்றியும் பிபின் ராவத்துக்கு விளக்கி கூறியதாக அதிகாரிகள் கூறினர்.

    பிபின் ராவத், லடாக் சுற்றுப்பயணம் வந்த சில நாட்களுக்கு பின்பு, திபாங் பள்ளத்தாக்கு, சுபன்ஸ்ரீ பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். மொத்தத்தில் கிழக்கு லடாக் மண்டலத்தில் இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்த தயார் நிலையை அவர் ஆய்வு செய்தார்.

    இந்திய ராணுவமும், விமானப்படையும் லடாக் எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றன என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. சீன நிலைப்பாட்டின் தன்மைக்கேற்ப இந்தியாவின் படைவலிமையை மேம்படுத்தும் திட்டத்துடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ஆய்வுப்பணி செய்ததாக கூறப்படுகிறது. அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) லடாக் ஆய்வு பயணத்தை முடித்துக்கொண்டு காஷ்மீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

    கடந்த மாதம் ராணுவ தரைப்படை பிரிவின் தலைமை தளபதி நரவனே கிழக்கு லடாக் பகுதியை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×