search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி

    சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.

    இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.

    இதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி வினியோக நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * ஜனவரி 16-ம் தேதி உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்க உள்ளோம்.

    * முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த 3 கோடி பேருக்கு போடப்பட உள்ள தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும்.

    * இன்னும் சில மாதங்களில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படப்படும். வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளை போல அல்லாமல் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 2 தடுப்பூசிகளும் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் மேலும் 4 தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளது.

    * கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம்.

    * முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 2-ம் கட்டமாக 50 வயதுக்கு அதிகமாக உள்ளோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 3-ம் கட்டமாக 50 வயதுக்கு கீழ் உள்ளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 

    என்றார்.
    Next Story
    ×