search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: எடியூரப்பா

    நாங்கள் அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று டெல்லி செல்லும் முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். தற்போது மாநிலத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க இருக்கிறேன். சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா பெரிய வெற்றி பெற்றது. அடுத்த ஒரு மாதத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதற்கு வேட்பாளர்களின் பெயரை இறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த விஷயங்கள் குறித்து நான் மேலிட தலைவர்களிடம் ஆலோசிக்க உள்ளேன். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. நாங்கள் அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்க உள்ளேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, முனிரத்னா, பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் லிம்பாவளி, ரேணுகாச்சார்யா, எஸ்.ஆர்.விஸ்வநாத், எம்.எல்.சி.க்கள் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர் ஆகியோரின் பெயர்கள் மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன. எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.க்கு மந்திரி பதவி வழங்க கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×