search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு ஒதுக்கியது

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நேற்று 263 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

    பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இந்தியாவில் கொரோனா பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 ஆயிரமாக குறைந்துவிட்டது. அதாவது 98 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். மரண விகிதமும் வெகுவாக குறைந்துவிட்டது. மரண விகிதம் 1.2 என்ற அளவில் உள்ளது.இந்த புள்ளி விவரங்கள், கர்நாடக அரசு கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

    கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நாளை (அதாவது இன்று) 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வருகிறது. முதல்கட்டமாக இவ்வளவு தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ள பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுப்போம். இந்த தடுப்பூசிகள் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கியதும் கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கப்படும். நமது விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். முடிந்தவரை அனைத்து மக்களுக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

    முதல்கட்டமாக மருத்துவத்துறை முன்கள பணியாளர்களுக்கு போடப்படுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கொரோனா தடுப்பூசி பெற தங்களின் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இன்று (அதாவது நேற்று) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. இது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் எந்த சிக்கலும் இல்லை. கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறவைகளோ அல்லது கோழிகளோ இறந்தால் அதை வெறும் கையால் தொடக்கூடாது.

    கையுறை மற்றும் முழு கவச உடை அணிந்து தொட வேண்டும். கோழிப்பண்ணைகளில் சானிடைசர் திரவத்தை தெளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். முட்டை சாப்பிடுபவர்கள் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். அரை வேக்காடு முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×