என் மலர்

  செய்திகள்

  நடிகை ராகினி திவேதி
  X
  நடிகை ராகினி திவேதி

  போதைப் பொருள் வழக்கு- நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதைப்பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி பின்னர் ஜாமீனில் வந்தார். 

  அதன்பின்னர், கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைதானார்கள். சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது. 
  Next Story
  ×