search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள்

    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ‘கறுப்பு பூனைப்படை’ என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் பங்கேற்கின்றனர்.
    புதுடெல்லி:

    இந்திய குடியரசு தினவிழா வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் நாட்டின் ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் பிரமாண்ட அணிவகுப்பு, கலாசார பன்மைத்துவத்தை எதிரொலிக்கும் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் போன்றவை இடம்பெறுகின்றன.

    இந்த அணிவகுப்பில் ‘கறுப்பு பூனைப்படை’ என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2017-ல் முதல் முறையாக இந்த அணிவகுப்பில் பங்கேற்ற இந்த படையினர் இந்த ஆண்டும் தங்கள் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்பை அரங்கேற்ற உள்ளனர்.

    இதைப்போல இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் துணை ராணுவ பிரிவில் முக்கியமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எப்.) அலங்கார ஊர்தி முதல் முறையாக இந்த பிரமாண்ட அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

    அதேநேரம் குடியரசு தின அணிவகுப்பில் வழக்கமாக இடம்பெறும் டெல்லி போலீசார் மற்றும் இசைக்குழுவினர், இந்தோ-திபெத் படையினர், எல்லை பாதுகாப்பு படையினரின் ஒட்டக இசைக்கலைஞர்கள் ஆகியோரின் அணிவகுப்பு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இடம்பெறாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×