search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பினாமி சொத்து வழக்கு : ராபர்ட் வதேராவிடம் 2-வது நாளாக விசாரணை

    பினாமி சொத்து சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்
    புதுடெல்லி:

    சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, பினாமி சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரியபோது, அவர் கொரோனா சூழலை காரணம் காட்டி ஆஜராக மறுத்தார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்களாக நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கினர்.

    நேற்று முன்தினம் (திங்களன்று) தொடர்ந்து 8 மணி நேரம் அவரது அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடந்தது. நேற்று 2-வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

    வதேரா அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட சொத்து விவரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் 2015-ம் ஆண்டில் பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×