search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி
    X
    ஜெகன்மோகன் ரெட்டி

    ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 150 இந்து கோவில்கள் மீது தாக்குதல் - மாநில பா.ஜ.க. பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

    ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 150 கோவில்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக மாநில பா.ஜ.க. பெண் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.

    சித்தூர்:

    விஜய நகரம் ராமதீர்த்தம் மலை உச்சியில் உள்ள ராமர் சிலை உடைத்ததை கண்டித்து சித்தூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநில தகவல் செய்தி பொறுப்பாளர் காளி புஷ்பலதா தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:- கடந்த வாரம் விஜய நகரம் ராமதீர்த்தம் மலை உச்சியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் சிலையை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கிணற்றில் வீசியுள்ளனர்.

    இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம் பொண்ட ஸ்ரீனிவாஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 150 கோவில்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    இதை கண்டித்து பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி பவானி மவுன போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அவரை விடுதலை செய்ய வேண்டும். பழமை வாய்ந்த ராமர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×