search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொச்சி- மங்களூரு இடையே 450 கி.மீ. குழாய் வழி கியாஸ் வினியோகம் - பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

    கொச்சி- மங்களூரு இடையிலான 450 கி.மீ. குழாய் வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
    புதுடெல்லி:

    கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. குழாய்வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி 5-ம் தேதி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், கொச்சியில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயுவாக்கும் முனையத்தில் இருந்து மங்களூருவுக்கு கியாஸ் அனுப்பப்படும். குழாய் வழியாக தினமும் 1.2 கோடி மெட்ரிக் கனமீட்டர் கியாசை அனுப்பமுடியும். கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது.

    கேரளாவில் எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது.

    இதனால் வீடுகளுக்கு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, செலவு குறைந்த குழாய்வழி இயற்கை எரிவாயுவும், போக்குவரத்துத் துறைக்கு அழுத்தப்பட்ட இயற்கை வாயுவும் வினியோகிக்கப்படும். குழாய் இணைப்பு செல்லும் பகுதியில் உள்ள மாவட்டங்களின் வர்த்தக, தொழில் பிரிவுகளுக்கு இயற்கை வாயு வினியோகம் செய்யப்படும். மொத்தம் ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டப்பணி முடிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நாடு, ஒரு கியாஸ் வினியோக அமைப்பு’ நோக்கத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
    Next Story
    ×