search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    கொரோனா தடுப்பூசி மீதான அகிலேஷ் யாதவின் அச்சம் நியாயமானது தான் - காங்கிரஸ் தலைவர் பேச்சு

    பாஜக அரசின் கொரோனா தடுப்பூசியை தான் எப்படி நம்பவுவது எனவும், தான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
    லக்னோ:

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது.
     
    அதேபோல், பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

    இதற்கிடையில், அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

    கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்மந்திரியுமான அகிலேஷ் யாதவ் நேற்று கூறுகையில்,

    ’நான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன். நான் பாஜகவின் தடுப்பூசியை எப்படி நம்புவது. எங்கள் அரசு (சமாஜ்வாதி ஆட்சி) எப்போது அமையுமோ அப்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். பாஜகவின் தடுப்பூசியை நாங்கள் போட்டுக்கொள்ளமாட்டோம்’ என தெரிவித்திருந்தார்.

    ரஷித் அல்வி

    அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் அந்த தடுப்பூசிகள் குறித்து பல சந்தேகங்கள் உள்ளதாக பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்நிலையில், அகிலேஷ் யாதவின் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷித் அல்வி கூறியதாவது:-

    சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்க்கு எதிராக பாஜகவும், பிரதமரும் பயன்படுத்தும்போது கொரோனா தடுப்பூசியும் தவறுதலாக பயன்படுத்தப்படலாம் என அகிலேஷ் யாதவ் அச்சப்படுவதில் எந்த தவறும் இல்லை. மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படும்போது இந்த அச்சம் நியாயமானது தான்.

    என்றார்.
    Next Story
    ×