search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனை வந்த மம்தா பானர்ஜி
    X
    மருத்துவமனை வந்த மம்தா பானர்ஜி

    கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா - ‘கங்குலி நலமுடன் உள்ளார்’ எனவும் பேச்சு

    நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியை மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார். 

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். 

    இதற்கிடையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்படுள்ளதாகவும், அதற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சவுரவ் கங்குலி பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு அவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    கங்குலியை சந்தித்தபின்னர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடன் கங்குலியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி,

    அவர் (கங்குலி) தற்போது நலமுடன் உள்ளார். அவர் என்னுடன் பேசவும் செய்தார். மருத்துவ ஊழியர்களுக்கும், டாக்டர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    என தெரிவித்தார். 

    முன்னதாக, கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்ஹரும் நேரில் வந்து கங்குலி உடல்நிலை குறித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×