search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி
    X
    பிரதமர் நரேந்திர மோடி

    பிரதமர் மோடி அவருடன் இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படம்

    அவருடன் பிரதமர் மோடி இருப்பதாக கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உடன் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் ஆர்எஸ்எஸ் முகாமில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பிரதமர் மோடி அருகில் இருப்பது மறைந்த ஆர்எஸ்எஸ் லக்ஷமன்ராவ் இனம்தர் ஆகும். எனினும், அதில் இருப்பது சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே என கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     விவசாயிகள் போராட்டம்

    முன்னதாக தற்சமயம் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க போவதாக அண்ணா ஹசாரே கூறியிருந்தார். இதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அண்ணா ஹசாரே இருப்பதாக கூறி பழைய புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது அண்ணா ஹசாரே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×