search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    ஜனவரி மாத ரூ.300 கட்டண டிக்கெட் இன்று வெளியீடு

    வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலை பாதையில் மருத்துவ முதலுதவி மையங்கள் உள்ளது. இந்த மையங்களை இணை செயல் அதிகாரி பசந்த்குமார் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமலைக்கு நடைபாதையில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அப்போது அனைத்து வசதிகளுடன் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் விதமாக இருக்க வேண்டும்.

    ஆகையால் அலிபிரி மலைப்பாதையில் உள்ள 4 மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் உள்ள முதலுதவி மைய கட்டிடங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி மற்றும் வயர்லென் செட் அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் மேலும் 2 முதலுதவி மையங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 25-ந்தேதியில் இருந்து வருகிற 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் நுழைவு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஏற்கனவே 3-ந்தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×