search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து பற்றி வைரலாகும் பகீர் தகவல்

    கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    கொரோனாவைரஸ் பாதிப்பை சரிசெய்யும் தடுப்பு மருந்து சோதனை உலகம் முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களை ஜாம்பிகளாக மாற்றி வருவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரல் பதிவுகளில் தனியார் செய்தி தொலைகாட்சியின் முக்கிய செய்தி அறிவிப்பின் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. முக்கிய செய்தியில், கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர் மற்ற நோயாளிகளை உண்கின்றனர் எனும் தகவல் இடம்பெற்று உள்ளது. 

    தடுப்பு மருந்து எடுத்து கொண்ட நேன்சி பெலோசி கைது செய்யப்பட்டார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     கோப்புப்படம்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் மார்பிங் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் படம் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். 

    அந்த வகையில் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்கள் ஜாம்பிகளாக மாறியதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×