search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)
    X
    டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

    இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 20 ஆக உயர்வு -பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள்

    பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட  பல நாடுகள் தடை செய்துள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    இதில், இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இதனால், மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.

    பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதில் நேற்று நிலவரப்படி 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களுடைய மாதிரிகளின் ஆய்வு முடிவுகளும் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. 

    இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
    Next Story
    ×