search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்த 279 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை... உச்சகட்ட அலர்ட்

    பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்தவர்களில் பலர் போலியான முகவரி மற்றும் போன் நம்பர் கொடுத்துள்ள நிலையில், 279 பேரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகள் துண்டித்து உள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

    பிரிட்டனில் இருந்து சமீபத்தில் இந்தியாவிற்கு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய வகை கொரோனாவின் தாக்கம் உள்ளதா? என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு வந்த 279 பயணிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். 184 பேர் தவறான தொலைபேசி எண்கள் மற்றும் விலாசங்களை கொடுத்திருப்பதாக காவல்துறை கூறி உள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதிய வகை கொரோனாவின் தாக்கம் இருந்தாலும் பயப்படத் தேவையில்லை என்று மாநில பொது சுகாதார இயக்குனர் கூறி உள்ளார்.  விழிப்புடன் இருத்தல், முறையாக மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
    Next Story
    ×