search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    இங்கிலாந்தில் இருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா தொற்று

    இங்கிலாந்தில் இருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கடந்த வாரம் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இதுபற்றிய அறிவிப்பினை வெளியிட்டார். இந்த புதுவகை வைரசானது, முன்பிருந்த கொரோனா வைரசை விட மிக எளிதில் பரவுகிறது என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மிக வேகமுடன் பரவி வருகிறது என்றும் அவர் கூறினார்.

    இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து உள்ளது. இந்தியாவில், வருகிற 31ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை அமலில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அது எந்த வகையை சேர்ந்தது என உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

    கேரளாவின் கோழிக்கோட்டில் புதுவகையான வைரசின் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் பரவி வரும் வைரசுடன் இந்த வைரசானது ஒத்திருக்கவில்லை.

    இதுபற்றி கேரள சுகாதார மந்திரி சைலஜா கூறும்பொழுது, கொரோனா வைரசின் தன்மையை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×