search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது நடவடிக்கை
    X
    கைது நடவடிக்கை

    ஆன்லைன் லோன் ஆப் மோசடி... தெலுங்கானாவில் சீன நாட்டவர் உள்பட 4 பேர் கைது

    தெலுங்கானா மாநிலத்தில் ஆன்லைன் லோன் ஆப் மோசடி தொடர்பாக சீன நாட்டவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சைபராபாத்:

    நாட்டில் ஆன்லைன் கடன் செயலிகள் (லோன் ஆப்) விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். எனவே, இதுபோன்ற செயலிகளிடமிருந்து விலகியிருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதேசமயம் ஆன்லைன் கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆன்லைவன் கடன் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் ஆன்லைன் கடன் செயலி மோசடி தொடர்பாக சீன நாட்டவர் உட்பட நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 2 பேரை தேடி வருகின்றனர். நகரத்தில் உள்ள கால் சென்டரான குபேவோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் 11 ஆன்லைன் கடன் செயலிகளை உருவாக்கியிருப்பதும், இதன்மூலம் வாடிக்கையாளர்களை தங்கள் வலையில் வீழ்த்தி கடன் வழங்கிவிட்டு, பின்னர் அவர்களை தங்கள் கால் சென்டர் மூலம் மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.

    இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய 11 ஆன்லைன் கடன் செயலிகளை காவல்துறையினர் பட்டியலிட்டுள்ளனர். அவை வருமாறு:-

    Loan Gram, Cash Train, Cash Bus, AAA Cash, Super Cash, Mint Cash, Happy Cash, Loan Card, Repay One, Money Box, Monkey box
    Next Story
    ×